கொரானா பற்றிய உண்மைகள்
குறிப்பு : கொரோனா பற்றிய கேள்விகள், குழப்பங்கள், வதந்திகள், மூடநம்பிக்கைகள் நம்மை சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன. உங்களுக்குள் இருக்கும் குழப்பங்களுக்கு விடை காணும் முயற்சியில் அடிக்கடி கேட்கப்படும் 50 கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்
கொரோனா என்பது ஒரு வைரஸ் குடும்பத்தின் பெயர்.பெரும்பாலும் நமக்கு நோய் தொற்று பாக்டீரியா, வைரஸ் ,பூஞ்சைகள் மூலமாக ஏற்படுகிறது .இதில் வைரஸ் மூலமாக பரவும் நோய் COVID 19. இந்த குடும்பத்தின் வைரஸ்கள் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.இந்த நோய் கிருமி மனிதர்களுக்கு பரவி மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு மிகவும் வேகமாக பரவக்கூடியது. SARS, MERS என இதற்கு முன்பு சில வைரஸ் தொற்று வந்ததுபோல், இம்முறை வந்திருப்பது COVID19 எனும் கொரோனா (RNA virus) வைரஸ் கிருமி தொற்று வந்திருக்கிறது. இதில் கொரோனோ என்று சொல்வது அதன் குடும்பப்பெயர்.
அதாவது biological 'family name" .
இன்னும் தெளிவாக சொல்லனும்னா கொரோனோ வைரஸ் இப்போ கண்டுபிடிக்கப்படவில்லை.
சுமார் 1960 களில் கண்டுபிடிக்கப்பட்டது....அதுவும் கோழிகளின் நுரையீரலில். பின் அது மனிதனின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின் காலசூழ்நிலைக்கேற்ப டார்வினின் survival of the fittest -படி, தன்னை மேம்படுத்தி கொண்டு பல நோய்களை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது இதுநாள் வரை சளி, இருமல், காய்ச்சல் என சாதாரணமாக நமக்கு பாதிப்புகள் ஏற்படுத்தி கொண்டு இருந்தது கொரோனோ வைரஸ் குடும்ப முன்னோர்கள் மூலம். காலப்போக்கில் அதன் சந்ததிகள் பலம்பெற்று
2003 ல்SARS-CORONO,
2012ல் MERS-CORONO வந்தது.
தற்போது பரவிவரும் வைரஸ் பெயர் SARS-COV2.. இதனால் பரவும் நோயின் பெயர் COVID-19.. SARRS- MERS போன்ற நோய்கள் ஒருவரிடமிருந்து ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு விரைவாக பரவும் தன்மை கொண்டது. ஆனால் COVID 19 பரவும் வேகம் மிக அதிகம் .அதாவது இரண்டிற்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிரமாக பரவும் என்பதே இதன் முன்னோர்களிடமிருந்து இது வேறுபட காரணம்.

அ) கிருமி பாதித்த ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு 20% நீர் துளி தொற்று(droplet infection) மூலமாகவும்,
ஆ) 80% தொடு பொருள் (fomite) மூலமாகவும் பரவும். தொடு பொருள் தொற்று என்பது, கிருமி பாதித்த ஒருவர் பயன்படுத்திய உடைகள், பொருட்கள், மற்றும் அவர் கை பட்ட இடங்களில் தெரியாமல் நம் கை படும் போது பரவும் தன்மை ஆகும். நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவரிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை கடைபிடிப்பதன் மூலம் இந்த தொற்று பரவாமல் தடுக்கலாம்.மேலும் ஒருவர் நம் அருகில் இருமூம் போது ஏற்படும் நீர் திவலைகள் நம் மீது நேரிடையாக படும் பொழுது ,நாம் தெரியாமல் அதனை முகம் , மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் தொடுவதன் மூலமும் பரவ வாய்ப்புள்ளது.

இதுவரை வந்துள்ள நோயாளிகளின் அறிகுறிகளை வைத்து பார்க்கும்போது, 100 பேருக்கு கொரோனா தொற்று வந்தால், அதில் 70 - 80 பேருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாமல் அல்லது சாதாரண மூக்கடைப்பு சளி போன்ற அறிகுறிகள் மட்டுமே இருந்துள்ளது. 15 நபருக்கு தீவிர சளி, மூச்சிரைப்பு மற்றும் அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்து மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகின்றது. அடுத்த 5 பேருக்கு மட்டும் உடல்நிலை மிகவும் மோசமாகி செயற்கை சுவாசம் தேவைப்படும்.
மரண விகிதமும் நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது. மேலும் இப்பொழுது உலகளவில் மரண விகிதம் 4.47(தோராயமாக) சதவீதமாக உள்ளது. ஆகையால், இந்த வைரஸ் யாரை தீவிரமாக பாதிக்கிறது, யாருக்கு மிதமான பாதிப்பு அளவோடு போகிறது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையும், முதியவர்களையும் , நாட்பட்ட நோய்களுக்கு உள்ளானவர்களையும் ஆபத்தான கட்டத்திற்கு விரைவில் கொண்டு சென்றுவிடுகிறது.

உலக அளவில் (மார்ச் 30 மாலை 6மணி ) 6,38,146 நபர்கள் இதுவரை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதில் 30,000 நபர்கள் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 942 பேர் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு, 100 பேர் முழுவதும் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 30 பேர் இறந்துள்ளார்கள்.
உங்களின் நெருங்கிய உறவினரோ , நண்பரோ கடந்த இரண்டு வாரங்களில் வெளி நாட்டு பயணம் மேற்கொண்டிருந்தால் அல்லது Covid 19 நோய் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுடன் பழகி இருந்தால் அல்லது நோயின் அறிகுறிகளான அதிகப்படியான காய்ச்சல் , தொண்டை வலி, தொடர்ந்து இருமல் , மூச்சு விட சிரமம் ஏற்படுதல் உங்களுக்கு இருந்தால் இந்த தொற்று இருக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக சளி மற்றும் காய்ச்சல் உண்டுபண்ணும் வைரஸ்கள், வெயில் காலம் வரும்போது அதனுடைய வீரியத்தை இழக்கும். இந்த Covid19 வைரஸ்க்கும் அதுவே நடக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகையால் விழிப்பாக இருக்க வேண்டியது நம்முடைய கடமை.
அடிப்படைச் சுகாதார வழிகளை கடைப்பிடிப்பதே இப்போதைக்கு சிறந்த வழி. சீனா அவ்வாறே இந்த தொற்றை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றில் சில
- ஒவ்வொருமுறை வெளியே சென்று வீட்டுக்குள் வரும்போதும் கைகளை நன்றாக 30 வினாடிகளாவது சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
- எந்த தின்பண்டம் தின்பதற்கு முன்பும் கண்டிப்பாக இவ்வாறு செய்ய வேண்டும்.
- இருமும் பொழுதும் தும்மும் பொழுதும், "cough etiquette" முறையை பின்பற்ற வேண்டும். சுத்தமான கைக்குட்டைய வைத்துக்கொண்டு அதில் இருமுவதும், தும்முவதும் நன்று.
- மக்கள் அதிகம் கூடும் இடமான திரையரங்குகள், ஷாப்பிங் மால், மண்டப விழாக்கள், கோயில்கள், பிரார்த்தனைக் கூடங்கள் ஆகியவற்றை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும். ஒரே ஒருவர் நோய்த்தொற்றோடு அங்கு இருந்தால், அது அனைவரையும் பாதிக்கக்கூடும்.
- இதையும் மீறி ஒருவேளை நமக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று சந்தேகம் இருந்தால், வீட்டில் தனியறையில் இருப்பது நலம். முடிந்தவரை இதைப் பின்பற்ற வேண்டும்.
முதலில் பதட்டமடைய வேண்டாம். மேலே கூறியது போல 82% பேருக்கு சாதாரண காய்ச்சல் வரவே வாய்ப்புள்ளது. மற்ற வைரஸ் காய்ச்சலை போல் கொரோனா காய்ச்சலும் உடல்வலி, சோர்வு மற்றும் வறட்டு இருமல் என்றே துவங்கும். வழக்கமாக காய்ச்சலின் போது செய்வது போல் அதிக அளவு நீர்ச்சத்து எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். உடல் ஓய்வு அவசியம். காய்ச்சல் குறைய பாரசிட்டமால் மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தல், தீவிர உடல் சோர்வு மற்றும் வறட்டு இருமல் இவை அனைத்தும் இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் குடும்பத்தில் இந்த COVID 19 என்ற வைரஸ் மிகவும் புதியது. இது தவிர, இந்த வைரஸ் பரவ ஆரம்பித்த நாட்களிலிருந்து பல உருமாற்றம் (mutation) அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால், முற்றிலும் இதைத் தடுத்து நிறுத்தக்கூடிய (vaccine) மருந்துகள் வர இன்னும் சிறிது காலம் பிடிக்கும். இப்பொழுது வெவ்வேறு இடங்களில் கொடுக்கப்படும் மருந்துகள் பரிசோதனை (trial) முறைகளிலேயே தரப்படுகின்றன. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, நோய்த் தொற்றினால் ஏற்படும் பெரும் கோளாறுகள் (complications) வராமல் இருக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேற்கூறிய பொருட்கள் அனைத்தும், நம் உடலினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் கொரோனா தொற்று வராமல் தடுக்க இவை மட்டும் போதாது. பொது சுகாதார நடவடிக்கைகளை சரியாக கையாளுதல் மட்டுமே இப்போதைக்கு பயனளிக்கக்கூடும்.
- ஒரே நேரத்தில் 10-15 பேருக்கு மேல் உள்ளே நுழையாமல், (1 மீட்டர் இடைவெளியில்) ஒருவர் பின் ஒருவராக பதிவு சீட்டு பெற்றுக் கொண்டு - இடைவெளி விட்டு - காத்திருந்து - சிகிச்சை பெறலாம்.
- துணைக்கு ஆள் தேவைப்படாத நோயாளிகளுடன், உறவினர்கள் செல்வதை தவிர்க்கலாம்.
- இருமல் - காய்ச்சலுடன் செல்பவர்கள், வெளிநாடு/வெளிமாநிலங்களில் இருந்து சமீபத்தில் வந்தவர்கள், கூட்டத்தில் இருந்து விலகி தனியாக காத்திருந்து அல்லது காய்ச்சல் பிரிவை அணுகி சிகிச்சை பெறலாம்.
- வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை அவர்களின் பிரச்சனைகளை தவிர்த்து, துணைக்கு அழைத்து செல்வதை தவிர்க்கலாம்.
- பார்வையாளர்கள், உள் நோயாளிகளை சந்திப்பதை தவிர்க்கலாம்.
- மருத்துவமனைக்கு நுழைவதற்கு முன்&பின் கைகளை ( சோப்பு/ Hand sanitizer/ surgical spirit) சுத்தம் செய்து, நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
- சீட்டு பதியும் இடம், ஆய்வகம், மருந்தகம் உட்பட எங்கும் கூட்டம் குவிவதை தவிர்க்கலாம்.
- வாரம் ஒரு முறை / வாரமிருமுறை மருத்துவமனைக்கு விசிட் அடிக்கும் முதியோர்கள் சிறிது நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்கலாம்.
- உடம்பு வலி, கை கால் வலி என மருத்துவமனைக்கு வரக் கூடிய நோயாளிகள் சிறிது நாட்களுக்கு வீட்டிலேயே ஓய்வு எடுக்க சொல்லலாம்.
- மருத்துவமனைகள் கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்து இருந்தாலும் தேவையற்ற இடங்களில் கைவிரல்களால் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
- சின்ன சின்ன மருத்துவ சந்தேகங்களுக்காக மருத்துவமனைக்கு செல்லாமல் தங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியர், செவிலியர் அல்லது தெரிந்த மருத்துவரிடம் போன் செய்து கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.மருத்துவமனைகளில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
104
அல்லது
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
Landline Nos. - 044-29510400 / 500
Mobile Nos. :
94443 40496, 87544 48477 ஆகியவை மூலமும்
அல்லது
பகிரி எண் (watsup)
9035766766 - என்ற எண்ணிற்கு வணக்கம் என்று அனுப்புவதன் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

நோயால் பாதிக்கப்பட்ட நாடு அல்லது நோய் பாதிப்புக்கு உள்ளான வேறு மாநிலத்தில் இருந்து திரும்பிய ஒரு நபர், பிறருக்கு நோய்க்கிருமி பரவுவதை தடுக்க, சமூகத்தில் இருந்து தன்னை விலக்கி, வீட்டில் தனி அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சில சுகாதார வழிமுறைகளை கடைபிடிப்பது. வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பது என அழைக்கிறோம்.
கழிவறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறை ஒதுக்கி தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். வீட்டில் வயதானோர் கர்ப்பிணிகள் குழந்தைகள் மற்றும் பிற நோயாளிகளிடம் இருந்து ஒரு மீட்டர் தள்ளி இருத்தல் அவசியம்.
வீட்டில் அங்குமிங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையில் மட்டும் இருக்க வேண்டும். ஒரு சில அறைகள் மட்டுமே இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிக தடுப்பு அமைத்து தனிமை படுத்தி கொள்ளலாம்.
வீட்டில் அங்குமிங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையில் மட்டும் இருக்க வேண்டும். ஒரு சில அறைகள் மட்டுமே இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிக தடுப்பு அமைத்து தனிமை படுத்தி கொள்ளலாம்.
வீட்டில் ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு பராமரிப்பு பணி செய்தல், தனிமைப்படுத்தப்பட்டவரின் உடை படுக்கை விரிப்பு பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை உதராமல், கை உறை அணிந்து அதனை அப்புறப்படுத்துதல், மேலும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவிய பின் மற்ற வேலைகளை செய்தல் வேண்டும். தனிமைப்படுத்த பட்ட அவருக்கு வைரஸ் அறிகுறிகள் தோன்றினால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரையும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்
பாதிக்கப்பட்டவர் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது வீட்டிற்குள் அங்கும் இங்கும் செல்லக்கூடாது. அவர்களை புத்தகம் படிப்பது,அல்லது பாடல் கேட்பது போன்ற அவருக்கு பிடித்த வேலைகளை செய்ய கேட்டு கொள்ள வேண்டும்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத்தலங்கள், கலாச்சார கூடங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள், விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், வாரச் சந்தைகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்லுதல் முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்.
அதிகப்படியான காய்ச்சல், தொண்டை வலி, தொடரச்சியாக இருமல் , மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே உதவிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கவேண்டும்.
குடும்ப உறுப்பினர்களோடு, நண்பர்களோடு, அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் போது குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
தடுப்பூசி கான ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரையும் தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை . அதிகாரப்பூர்வ தகவல் இல்லை . நிமோனியா தடுப்பூசி கொரொனா வைரஸ் நோயை தடுக்காது.
மேலும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (ஆன்டிபயாட்டிக்) பாக்டீரிய நோயை தடுக்கவும் குணப்படுத்தவும் உள்ள மருத்துவ கண்டுபிடிப்பு. இது வைரஸ் நோய்களைத் தடுக்கவோ குணப்படுத்தவோ செய்யாது. ஆலோசனை இல்லாமல் மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி உண்பது அல்லது தாமாகவே சுய வைத்தியம் செய்துகொள்வது ஆபத்தில் முடியும்.

பரவாது.பரவியதாக எவ்வித ஆதாரமும் இல்லை.
நோய்த்தொற்று அறிகுறிகளான சளி, தொண்டை வலி, அதிகப்படியான காய்ச்சல், தொடர்ந்து இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். உங்களுக்கு மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தாலோ அல்லது பாதிப்புக்குள்ளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து இருந்தாலோ அல்லது பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உடன் தொடர்பு கொண்டிருந்தாலோ உடனடியாக 24 மணிநேர மாநில கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளவும். கட்டுப்பாட்டு மையம் உங்களது தகவல்களை பெற்றுக் கொண்டு நீங்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பரிசோதனை பற்றிய விபரங்களை தெரிவிக்கும். உங்களுக்கு பரிசோதனை தேவைப்பட்டால் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களில் மட்டுமே பரிசோதனை செய்யப்படும்.
அரசு மருத்துவ மனைகளில் செயல்படும் பரிசோதனை கூடங்கள்.
1.கிங் இன்ஸ்டிடியூட், சென்னை
2.சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை
3.தேனி மருத்துவக் கல்லூரி ,தேனி
4.திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி
5. திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர்
6.அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம்
7. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்
8.விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்
9.மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை
10.கி ஆ பெ விசுவநாதம் மருத்துவ கல்லூரி, திருச்சி
தனியார் பரிசோதனை கூடங்கள்
1.கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி, வேலூர்
2.அப்போலோ மருத்துவமனை, சென்னை
3.நியூபெர்க் எர்லிக் பரிசோதனைக் கூடம், பாலாஜி நகர், சென்னை.
4. ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போரூர், சென்னை.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக்கூடங்கள் பட்டியல்
www.icmr.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

நிலவேம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய ஒரு சித்த மருத்துவப் பொருளாகும். ஆகவே அது covid 19 நோயை தடுக்க பயன்படாது. நிலவேம்பு கசாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிடலாம்
பொதுவாக நாம் குளிர்ச்சித் தன்மை கொண்ட குளிர்ச்சி தன்மை கொண்ட உணவுகளை தவிர்க்கலாம். நமக்கு ஏற்கனவே தெரிந்த விட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். அது சளி பிடிக்காமல் இருக்க உதவும்.
இப்பொழுது கொரோனா நோய்தொற்று உள்ளவர்களுக்கு நமது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் உங்களுக்காக
காலை
இஞ்சி + தோல் நீக்காமல் எலுமிச்சை பழம் சேர்த்து கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டிய குடிநீர்.
பிறகு காலை உணவு
அடுத்து 11 மணி
சாத்துக்குடி சாறு
மதிய உணவு
கீரை அல்லது கேரட், பீன்ஸ் சேர்த்து சமைத்த சோறு.
மாலை 4 மணி அளவில்
வெள்ளரிக்காய் சாலட்
இரவு உணவு
இட்லி அல்லது கிச்சடி
9 மணி அளவில்
மிளகு ரசம், பொட்டுக்கடலை
இரவு 11மணி அளவில்
மஞ்சள் + மிளகு சேர்த்து காய்ச்சி வடிகட்டிய குடிநீர்
இந்த உணவு பட்டியலின் முக்கிய நோக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதற்கும், சளி, இருமல் தொற்றை குறைப்பதற்கும்.
தமிழர்களாகிய நமது அன்றாட உணவே மருந்தாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு சளிஇருமல் சாதாரணமாக அடிக்கடி வரும் ஒரு பிரச்சினை ஆகும். நாம் இதிலிருந்து எவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நோயின் அறிகுறிகள் அதிகப்படியான காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், குறுகிய காலத்தில் மூச்சுத் திணறல் ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். சாதாரண சளி காய்ச்சலாக இருந்தால் காய்ச்சல் அதிகமாக இருக்கும், மூக்கு ஓழுகல் இருக்கும் லேசான இருமல் இருக்கும். ஆனால் மூச்சுத்திணறல் வராது மேலும் இந்த நோய் வெளிநாடுகள் சென்று வந்தவர்கள் இடமோ அல்லது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இடமிருந்து வருவதற்கு பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது
இது சுவாச பாதை மூலமாக பரவுகிறது. நோய் தொற்று உள்ளவர்கள் தொடுவதால், நாம் அதனை தொட்டு, முகத்தில் தொட்டால் நமக்கு கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.
அது ஒரு வழி முறை மட்டுமே, சமூக விலகல், கை கழுவுதல், முக கவசம் அணிதல் போன்று அதுவும் ஒரு முறை. ஆனால் இம்முறையில் இதனை கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புகள் அதிகம்
இது அனைவரையும் கொள்வதில்லை. கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இப்பொழுது இறப்பு விகிதம் 4.47 சதவீதமாக உள்ளது. அதாவது 100 பேருக்கு பாதிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 4 பேர் முதல் 5 பேர் இறக்க வாய்ப்புள்ளது.இது நாட்டுக்கு நாடு வேறுபடும்.
இல்லை . ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
31.எலுமிச்சை, இஞ்சி தட்டி சுடுதண்ணீரில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என்கிறார்கள் சரியா?
ஆம். நோய் எதிர்ப்புச் சக்தி பெருக வாய்ப்புள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அவ்வளவே. ஆனால் கொரோனா நோய் குணமாக வாய்ப்பு இருப்பதாக ஆதாரம் இல்லை.
அவர்களை மருத்துவமனைக்கு சென்று பரி சோதித்து சாதாரண சளி காய்ச்சலுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது.
அது இன்னும் அரசின் பரிசீலனையில் உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்று கருதுகிறேன். இதுவும் நோய் எதிர்ப் சக்தியை அதிகரிக்க ஒரு யுக்தி மட்டுமே.(இதனை சித்த மருத்துவ நபர்களிடம் கேட்டு உறுதி செய்ய கொள்ள வேண்டும்)
அவ்வாறு செய்வது நம் தொண்டையில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதற்கு பயன்படும். அவ்வாறு செய்வதே சாதாரண சளி ஏற்படுத்தும் கிருமிகளை நீக்க வல்லது.
அது முதல் நிலை வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவது முதல்நிலை.
வெளிநாட்டில் உள்ளவர்கள் மூலம் இங்குள்ளவர்களுக்கு இங்குள்ளவர்களுக்கு பாதிக்கப்படுவது இரண்டாவது நிலை .
சமூகப் பரவலாக சமூகத்திலிருந்து (இங்குள்ள நோயாளிகள் இடமிருந்து) தொற்று ஏற்படுவது மூன்றாவது நிலை
இது அனைவருக்கும் வருவது நான்காவது நிலை.
இப்பொழுது நாம் மூன்றாவது நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் உள்ளவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

முகக்கவசம் நோய் தொற்று உள்ளவர்கள் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் அவர்களை பரிசோதிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அணிய வேண்டும். மற்றவர்களுக்கு கட்டாயம் கிடையாது.ஆனால் இது அறிகுறிகள் அதிகமின்றி இருக்கும் 70% நோயாளிகள் இடமிருந்து பரவ வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் முக கவசம் அணிதல் நல்லது.
N95 முகக் கவசம் அல்லது மூன்றடுக்கு முகக் கவசம் மட்டுமே வைரஸ் நோய் கிருமி பரவுதலை தடுக்க வல்லது. அதுவும் 95 சதவீதம் மட்டுமே. ஆனால் மற்ற முக கவசங்கள் உங்களிடமிருந்து மற்றவருக்கு பரவாமல் தடுக்கும்.
நோயின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே சிறந்த வழி.
வீட்டிற்கு வெளியே சென்று வந்தால் கட்டாயம் கைகளை, கால்களை கழுவ வேண்டும். வீட்டிற்கு உள்ளே இருந்தால் நாம் சில பொருட்களில் வெளியில் சென்று வந்து கை வைத்திருக்கலாம், அந்தப் பொருட்களில் அந்த கிருமிகள் இருக்கலாம், ஆகவே, வீட்டில் இருக்கும் பொழுதும் கைகளை கழுவுதல் நல்ல பழக்கம்.இது நமக்கு பல நோய்களில் இருந்து காக்கும்.